நூருல் ஹுதா உமர்
மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் வெளிப்புறப் பகுதிக்கு ஒளியூட்டும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில், மருதமுனை பைத்துல் ஹெல்ப் அமைப்பு LED மின்குமிழ்களை வாங்கி அன்பளிப்புச் செய்து, அவற்றை உரிய இடங்களில் பொருத்தும் பணிகளையும் நிறைவேற்றியுள்ளது.
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி நிர்வாக சபையின் வேண்டுகோளை ஏற்று, குறித்த பணிகளை உடனடியாக மேற்கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பணிகள் மூலம் கல்லூரி வளாகத்தின் வெளிப்புறப் பாதுகாப்பும், இரவு நேரப் பயன்பாடும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருதமுனை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் மற்றும் சமூக சேவகரான றைஸுல் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், பல வருடங்களாக அந்-நஹ்ழா அரபுக் கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் பல்வேறு வகையான உதவிகளையும் பங்களிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் எனவும் கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வமைப்பின் இந்தப் பங்களிப்பு கல்வி மற்றும் சமூக சேவைக்கான சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

