– யாழ் அஸீம் –
வரலாறு இல்லாத சமூகம் வேரற்ற மரத்தைப் போன்றது என்றார் புரட்சிக்கவிஞர் அல்லாமா இக்பால். வரலாற்று வேரின் ஆழம் எந்த அளவுக்கு பதிந்திருக்குமோ அந்த அளவுக்கு அந்த சமூகம் வெற்றி பெறும்.பல்லின சமூகங்கள் வாழ்கின்ற எமது நாட்டிலே தன் வரலாற்று ரீதியான அடையாளங்களை நிறுவ வேண்டிய தேவையை சிறுபான்மைச் சமூகம் பெற்றுள்ளது. உண்மையில் ஒரு சமூகத்தின் கடந்தகாலவரலாற்றுக் குறிப்புக்கள் சம்பவங்கள், ஆதாரங்கள்தான் இளைய சந்ததிகள் எதிர்கால கனவுடன் திடகாத்திரத்துடன் பயணிக்க உதவுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாண முஸ்லிம் எழுத்தாளர்கள் அவர்களது வரலாறு பற்றிய பல நூல்களை எழுதி தம் பொறுப்புக்களை ஓரளவு நிறைவேற்றியுள்ளார்கள் எனலாம். அவர்கள் எழுதிய நால்களின் விபரங்கள் பின்வருமாறு,









