கண்டி மீரா மக்கம் பள்ளிவாசல் – சகவாழ்வின் வரலாற்றுச் சின்னம்.
கண்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீரா மக்கம் ஜும்மா பள்ளிவாசல், இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முழு தேசத்தின் சமய சகவாழ்வையும் நிரூபிக்கும் ஒரு தனித்துவமான இடமாகும்.
இந்த பள்ளிவாசல் வரலாறு பற்றிய சில முக்கியமான தகவல்கள்:
🔹 அரச ஆதரவு: இந்த பள்ளிவாசல் கட்டுவதற்கான நிலம் கண்டியை ஆண்ட மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனால் நன்கொடையாக வழங்கப்பட்டது
🔹 அஸ்கிரி விகாரையுடனான உறவு: இந்த நிலம் முதலில் அஸ்கிரி மகா விகாரைக்குச் சொந்தமானது, மன்னர் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்டது.
🔹 தனித்துவமான கட்டிடக்கலை: 1864 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த பள்ளிவாசல், ”Baroque” எனப்படும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலிருந்தே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே இருந்த உன்னத சகோதரத்துவத்தை நினைவுகூரும் இந்த புனிதத் தலம், இன்றும் கண்டியின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.